புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, நீர்பழனி ஊராட்சிக்கு உட்பட்ட காரப்பட்டு கிராமத்தில் புதுக்குளம் என்ற நீர்ப்பாசன குளம் உள்ளது. இந்த குளத்தின் நீர்பிடிப்பு மற்றும் கரை பகுதியை ஒட்டிய பகுதிகளில் அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியும், களம் அமைத்தும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களுக்கு சென்று வருவதற்கு இடையூறாக இருக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.