புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், மலைக்குடிப்பட்டியில் புதிதாக சந்தை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த சந்தை கட்டிடங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளதால் இதனை சமூக விரோதிகள் சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.