திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பேரங்கியூர் தென்பெண்ணையாற்றில் உயர்மட்ட மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் வடக்குபகுதியில் உள்ள 10 -வது தூண் பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பள்ளம் ஏற்பட்டுள்ளதால் அந்த தூண் தற்போது மிகவும் பலவீனமடைந்து காணப்படுகிறது. தற்போதுஆற்றில் மழைநீர் குறைந்த அளவு செல்கிறது. வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில் தூண் உடைந்து பாலம் இடிந்து விழும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.