புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, மறமடக்கி 108 ஆம்புலன்ஸ் கடந்த ஒரு மாதமாக பிராணவாயு கொடுக்கும் ஓ2 கேஜ் மீட்டர் மற்றும் சிலிண்டருக்கு செல்லும் டியூப் இல்லாமல் இயக்கப்படுகிறது. இதனால் மூச்சுத்திணரல் மற்றும் நெஞ்சுவலி போன்ற அவசர நோயாளிக்கு ஆக்சிஜன் கொடுக்க முடியாமல் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.