பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு செல்லும் நுழைவுவாயிலின் குறுக்கே சிறுபாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் தற்போது உடைந்துள்ளது. இதனால் இதன் வழியாக அரசு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் நோயாளிகள் சிறுபாலத்தில் உள்ள உடைப்பில் சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே நோயாளிகளின் நலன் கருதி சிறுபாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.