தியாகதுருகம் அருகே முடியனூர் ஊராட்சியில் மயானத்துக்கு செல்லும் சாலையில் உள்ள வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் முறையான பராமரிப்பு இன்றி தற்போது சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் பாலத்தில் மரக்கன்றுகளும் வளர்ந்து வருகிறது. இதனால் பாலம் தற்போது மிகவும் பலவீனமடைந்துள்ளது. ஆகவே பாலம் உடைந்து விழுந்து ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்குள், அதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.