கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் சேதமடைந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இங்கு படிக்கும் 25-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றோர்கள் அச்சத்துடன் அனுப்பி வைக்கின்றனர். எனவே அசம்பாவிதம் ஏதும் நிகழும் முன் சேதமடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?