தியாகதுருகம் அருகே எறஞ்சி கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் பழுதடைந்து காணப்படுகிறது. குறிப்பாக கட்டிடத்தின் மேற்கூறையில் சிமெண்ட்டு காரைகள் பெயர்ந்து கீழே விழுந்து வருகின்றன. தற்போது கட்டிடம் மிகவும் பலவீனமடைந்து காணப்படுவதால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.