கோத்தகிரி போலீஸ் நிலையம் முன்பு அரசு ஆஸ்பத்திரிக்கு பொதுமக்கள் பாதுகாப்பாக நடந்து செல்ல நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. அந்த சாலையில் கட்டுமான பணிக்காக கொட்டபட்ட மண் அகற்றப்படாமல் கிடக்கிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது. இதன் காரணமாக அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது. எனவே நடைபாதையில் இருந்து மண்ணை அகற்ற வேண்டும்.