கச்சிராயப்பாளையம் அடுத்த கோமுகி அணை அருகில் அரசு பெண்கள் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதி வளாகம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. இதனால் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளதால், விடுதியில் தங்கியுள்ள பெண்கள் அச்சப்படுகின்றனர். எனவே அப்பகுதியில் உள்ள செடி, கொடிகளை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.