தியாகதுருகம் அருகே விருகாவூர்-அசகளத்தூர் செல்லும் சாலையில் கோமுகி ஆற்றை கடந்து செல்ல ஏதுவாக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் மழைக்காலங்களில் கோமுகி ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்து விடும் போது பாலத்திற்கு மேல் தண்ணீர் செல்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொரசக்குறிச்சி, ஒகையூர், சாத்தனூர் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.