கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் குஞ்சப்பனை அருகே உள்ள குறுகிய வளைவில் தடுப்புச்சுவர்கள் இடிந்து விழுந்து உள்ளன. அங்கு வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்தால், அந்த பகுதி வழியாக பள்ளத்தில் கவிழும் அபாயம் நிலவுகிறது. எனவே இடிந்து விழுந்துள்ள தடுப்புச்சுவர்களை சீரமைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.