மரக்காணம் அருகே சிறுவாடியில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் கட்டிடம் பலவீனம் அடைந்து காணப்படுவதால், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த கட்டிடத்தை இடித்து விட்டு, புதிய கட்டிடம் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.