புதுக்கோட்டை மாவட்டம், திருவப்பூரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான குளத்தில் குப்பைகள் கொட்டுப்பட்டு வருகிறது. மேலும் அருகில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் இந்த குளத்தில் விடப்படுவதினால் இந்த குளம் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.