மரக்காணம் அருகே சிறுவாடி ஊராட்சியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் தற்போது வரை திறப்பு விழா காணப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. மேலும் இரவில் இந்த கட்டிடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.