சின்னசேலத்தில் இருந்து பாண்டியன்குப்பம் செல்லும் வழியில் சந்தை கூடம் அருகே இருந்த தரைப்பாலம் சேதமடைந்த காரணத்தால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்டது. ஆனால், மேற்கொண்டு பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்படுள்ளதால், இதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், தற்காலிக சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். எனவே பாலம் கட்டும் பணியை விரைந்து தொடங்கி, முடிக்க வேண்டும்.