தியாகதுருகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள மக்கள் முக்கிய சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சியில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் நிலை உள்ளது. இதற்காக வெகுதூரம் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதால், நோயாளிகள் அவதிப்படுகின்றனர். எனவே தியாகதுருகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.