புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மாணவ- மாணவிகளுக்கான புதிய கழிவறைகள் கட்டும் பணிகள் தொடங்கி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவ- மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். ஆகவே பள்ளி வளாகத்தில் கட்டப்படும் கழிவறைகளை விரைந்து கட்டி முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.