கோத்தகிரி பகுதியில் தனியார் தொலை தொடர்பு நிறுவனம் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு இணைய சேவை வழங்க நகரின் முக்கிய சாலையோரங்களில் இரும்பு கம்பங்கள் நடப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கு தோண்டிய மண்ணை, அங்கிருந்து அகற்றாமல் சாலையில் போட்டு விட்டு செல்கின்றனர். குறிப்பாக மேட்டுப்பாளையம் செல்லும் பிரதான சாலையில் டானிங்டன் பகுதியில் மண்ணை அகற்றாமல் அதிகளவில் போட்டு வைத்திருப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.