தியாகதுருகம் அய்யப்பன் கோவில் அருகே பழமை வாய்ந்த கோட்டக்குளம் அமைந்துள்ளது. இந்த குளம் தூர்ந்துபோய் கிடக்கிறது. இதனால் மழைக்காலங்களில் குளத்தில் அதிக அளவில் தண்ணீரை சேமித்து வைக்கமுடியவில்லை. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் குளத்தின் சுற்றுச்சுவர் சேதமடைந்து கிடக்கிறது. இதனால் அங்கு விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.