கோத்தகிரி கடைவீதி, டோபிகானா வழியாக செல்லும் நீரோடை முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்தும், புதர் செடிகள் வளர்ந்தும் காணப்படுகிறது. இதன் காரணமாக நீரோட்டம் தடைபட்டு வருகிறது. இதனால் மழைக்காலத்தில் நீரோடையில் இருந்து தண்ணீர் வெளியேறி விளைநிலங்களுக்குள் புகும் அபாயம் உள்ளது. எனவே அந்த நீரோடையை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.