சங்கராபுரம் தாலுகா மூங்கில்துறைப்பட்டு கிராமத்தில் உள்ள மோகன் நகரில் கழிவுநீர் கால்வாயை கடந்து செல்வதற்கு ஏதுவாக சிறுபாலம் அமைக்கப்பட்டது. தற்போது இந்த பாலம் பலத்த சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் இதில் உள்ள கான்கிரீட் கம்பிகள் ஊசி போல் வெளியே தொிகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஒரு வித அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே விபரீதம் நிகழும் முன் சேதமடைந்த சிறுபாலத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.