புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை மடத்துக்கடை அருகே சிவகங்கை என்ற மடத்தூரணி உள்ளது. இந்த ஊரணி பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆதனக்கோட்டை பொதுமக்களின் குடிநீர்தேவையை பூர்த்தி செய்யும் ஊரணியாக இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த ஊரணி குப்பை கொட்டும் இடமாகவும், கழிப்பிடமாகவும் பயன்படுத்தப்படுகிறது. குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால், காற்று மாசு ஏற்படுகிறது. மேலும் இந்த ஊரணி தூர்வாரப்படாமல் காணப்படுவதனால் மழை பெய்யும் போது மழை நீரை அதிக அளவில் சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வெயில் காலங்களில் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.