முட்புதர்களை அகற்ற கோரிக்கை

Update: 2023-07-26 13:39 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரி அக்னி ஆற்றில் தரைப்பாலத்திற்கு அருகே முட்புதர்கள் மற்றும் கோரை புற்கள் மண்டி கிடக்கின்றன. 10 அடி உயரத்திற்கு முட்கள் வளர்ந்து இருப்பதால் நீரோட்டம் பாதிக்கப்படுகிறது. மேலும் தண்ணீர் தேங்கி மாசு அடைந்து வருகிறது. இதனால் ஆற்று நீரை பயன்படுத்துபவர்கள், ஈம கிரியை உள்ளிட்ட சடங்குகளை செய்ய வருபவர்கள் பெரும் சிரமப்படுகின்றனர். இந்த முட்புதரில் சிலர் கழிவு பொருட்களை வீசி செல்வதால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே திருமணஞ்சேரி அக்னி ஆற்று பாலம் அருகே மண்டி கிடக்கும் முட்புதர்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்