கோத்தகிரி கடைவீதி, கறிக்கடை பாலம் மற்றும் காமராஜர் சதுக்கம் ஆகிய பகுதிகளில் தினமும் அதிகாலை முதலே சிலர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் மது விற்பனை நடைபெறும் இடங்களில் பொதுமக்கள் நடமாட மிகுந்த அச்சம் அடைகின்றனர். எனவே இதுபோன்ற சட்டவிரோத மது விற்பனையை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.