கோத்தகிரி பகுதியில் இருசக்கர வாகனங்களில் செல்லும் பெரும்பாலானோர் ஹெல்மெட் அணியாமல் செல்கின்றனர். குறிப்பாக அரசு ஊழியர்கள் கூட ஹெல்மெட் அணிவது இல்லை. இது தவறான முன்னுதாரணமாக விளங்குகிறது. இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்பது தமிழக அரசின் உத்தரவு. ஆனால் அதை அரசு ஊழியர்களே பின்பற்றவில்லை. அவர்களை பார்த்து பொதுமக்களும் ஹெல்மெட் அணிவது இல்லை. எனவே கோத்தகிரி பகுதியில் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து செல்லாதவர்கள் மீது பாரபட்மின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.