கோத்தகிரி காந்தி மைதானத்தில் தொடர்ந்து பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு போட்டிகளை நடத்த இரு நாளைக்கு 1.200 ரூபாய் கட்டணம் எஸ்.டி.ஏ.டி மூலம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பல லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தாலும், மைதானத்தை பராமரிக்க ஒரு ரூபாய் கூட செலவிடுவதில்லை. இதனால் மைதானத்தில் புல் திட்டுக்கள் ஏற்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு வேலிகளும் பழுதடைந்து உள்ளதால் விளையாட்டு வீரகள் சிரமதிற்குள்ளாகி வருகின்றனர். எனவே மைதானத்தை பராமரிக்கவும், தின கட்டணத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.