திருக்கோவிலூர் அருகே மேலக்கொண்டூர் ஊராட்சியில் உள்ள விளையாட்டு மைதானம் தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் தகுந்த பராமரிப்பு இல்லாத காரணத்தால் செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மாணவர்கள், இளைஞர்கள் விளையாட்டு மைதானத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.