கோத்தகிரி நகரின் முக்கிய பகுதிகளான காளவாய், மாரியப்பன் தெரு, சேட் லைன் உள்ளிட்ட பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் ஒரு கரடி உலா வருகிறது. இதன் காரணமாக குழந்தைகளை வெளியே விளையாட அனுப்ப முடியவில்லை. மேலும் வீடுகளை விட்டு வெளியே வரவே அச்சப்பட வேண்டிய நிலை உள்ளது. அந்த கரடி, மனிதர்களை தாக்கும் அபாயம் காணப்படுகிறது. எனவே முன் எச்சரிக்கை நடவடிக்கையாக குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் அந்த கரடியை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.