குன்னூர் பந்திமை பகுதியில் இருந்து ராணுவ பயிற்சி மையத்துக்கு சாலை செல்கிறது. இது வாகன போக்குவரத்து மிகுந்த சாலையாக விளங்குகிறது. இந்த சாலையில் கால்நடைகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இதன் காரணமாக அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே அங்கு விபத்துகளை தடுக்க கால்நடைகள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.