கோத்தகிரி ராம்சந்த் சதுக்கம் பகுதியில் தண்ணீர் திறந்து விடும் வால்வு அமைக்கப்பட்டு உள்ள தொட்டியின் மூடி பழுதடைந்து உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்வோர் அந்த தொட்டிக்குள் தவறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். சில நேரங்களில் இருசக்கர வாகனங்களும் ெதாட்டியில் இறங்கி விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே அந்த தொட்டிக்கு வலுவான மூடி அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.