கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் உள்ள குடியிருப்புகளுக்கு செல்லும் சாலையின் இருபுறமும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. இவை சாலையை ஆக்கிரமித்து உள்ளதோடு விஷ ஜந்துகள் மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிக்க காரணமாக அமைகிறது. இதனால் அந்த சாலையை பயன்படுத்தி வரும் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். இரவில் வீடுகளை விட்டு வெளியே வரவே தயங்குகின்றனர். எனவே அந்த புதர் செடிகளை வெட்டி அகற்ற வேண்டும்.