கண்டாச்சிபுரம் பஸ்நிலையம் அருகே திருவண்ணாமலை-விழுப்புரம் மெயின் ரோட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு 10 நாட்களுக்கு மேல் ஆகியும் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கப்படவில்லை. எனவே கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து தொடங்கி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.