விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தால் அச்சம்

Update: 2023-06-25 16:52 GMT
வடபொன்பரப்பியில் இருந்து கள்ளக்குறிச்சி செல்லும் சாலையில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு முட்புதர்கள் அதிக அளவில் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இ்தன் காரணமாக சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வரும் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே சார்பதிவாளர் அலுவலகத்தை சுற்றி வளர்ந்துள்ள முட்புதர்களை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்