கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பின்புறம் உள்ள வியூஹில் மற்றும் சேட்லைன் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலையின் இருபுறமும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. இதன் கரணமாக அந்த பகுதி காட்டெருமைகளின் இருப்பிடமாக மாறி விட்டது. மேலும் விஷ ஜந்துகளின் நடமாட்டம் காணப்படுகிறது. இதனால் அந்த சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே அங்கு அடர்ந்து வளர்ந்துள்ள புதர் செடிகளை வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.