சுற்றுசுவர் அமைக்கப்படுமா?

Update: 2023-06-11 13:57 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அக்ரஹாரம் அனுமார் கோவில் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 100 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். அருகில் அங்கன்வாடி மையம், வட்டார வள மையம் போன்றவை செயல்பட்டு வருகின்றன. இந்த கட்டிடங்கள் அனுமார் கோவில் குளத்தின் கரையில் அமைந்து உள்ளன. மழைகாலத்தில் குளத்தில் தண்ணீர் இருக்கும் நிலையில் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே அச்சப்படும் நிலை உள்ளது. எனவே மாணவர்களின் நலன்கருதி அரசு தொடக்கப் பள்ளி, அங்கன்வாடி மையத்திற்கு சுற்று சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்