கச்சிராயப்பாளையம் அருகே எடுத்தவாய்நத்தம் காலனி பகுதியில் சாராய விற்பனை, சூதாட்டம் போன்றவை அதிக அளவில் நடக்கிறது. இதனால் அப்பகுதியில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. எனவே அப்பகுதியில் போலீசார் அடிக்கடி ரோந்து சென்று குற்றச்செயல்களில் ஈடுபடுவோர்களை கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.