கச்சிராயப்பாளையம் அருகே எடுத்தவாய்நத்தம் பகுதியில் கள்ளச்சாராய விற்பனை அதிக அளவில் நடைபெறுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள சிறுவர்களும் மதுவாங்கி குடித்து, போதைக்கு அடிமையாகி வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் குற்றச்சம்பவங்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் போலீசார் அடிக்கடி ரோந்து சென்று குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்ய வேண்டும்.