கோத்தகிரி ராம்சந்த் சதுக்கம் முதல் கிளப்ரோடு வரை உள்ள குறுகிய சாலையோரத்தில் வரிசையாக தனியார் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்கின்றன. எனவே அந்த சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.