புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி சீனி கடைமுக்கத்தில் இருந்து பஸ் நிலையம் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான இடம் திறந்த வெளி கழிப்பிடமாக செயல்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அந்த சாலையில் நடந்து செல்வோர், பஸ் பயணிகள் என அனைவரும் மூக்கை மூடிக்கொண்டு செல்லவேண்டிய நிலை உள்ளது. மேலும் இப்பகுதியில் ஓட்டல், டீக்கடை, பேக்கரி போன்ற உணவு பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகள் அதிகம் உள்ளன. இந்த திறந்தவெளி கழிப்பிடத்தால் வாடிக்கையாளர்கள் முகம் சுளிக்கும் நிலை உள்ளதுடன், தொற்று நோய் ஏற்ப்பட்டு சுகாதாரகேடு உருவாகும் வாய்ப்பும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.