கோத்தகிரி காந்தி மைதானத்தில் பார்த்தீனியம் செடிகள் அடர்ந்து வளர்ந்து இருந்ததால் விளையாட்டு வீரர்கள் மற்றும் நடைபயிற்சி செல்வோருக்கு சுவாச கோளாறு ஏற்படும் அபாயம் இருந்தது. இந்த பார்த்தீனியம் செடிகளை அகற்ற வேண்டும் என்று 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக அங்கு வளர்ந்திருந்த பார்த்தீனியம் செடிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. இதனால் செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.