கோத்தகிரி மார்க்கெட், தாசில்தார் அலுவலகம், புயல் நிவாரண கூடம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான குரங்குகள் கூட்டம், கூட்டமாக வந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் வீடுகளை விட்டு வெளியே வரவே அச்சப்படுகிறார்கள். மேலும் குழந்தைகளை வெளியே விளையாட அனுப்ப முடியவில்லை. எனவே அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.