கோத்தகிரி காந்தி மைதானத்தில் நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள், சிறுவர்கள் விளையாட்டு பயிற்சி பெற்று வருவதுடன், ஏராளமானோர் நடைபயிற்சியும் மேற்கொள்கின்றனர். ஆனால் மைதானத்தின் பல இடங்களில் சுவாச கோளாறை ஏற்படுத்தும் பார்த்தீனியம் செடிகள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன. எனவே ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் அந்த செடிகளை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.