கோத்தகிரி ராம்சந்த் சதுக்கம் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதி ஆகும். இங்கு சாலையோரத்தில் குடிநீர் திறந்து விடும் வால்வு கொண்ட தொட்டி உள்ளது. இந்த தொட்டி சரிவர மூடப்படமால் கிடக்கிறது. இதனால் அடிக்கடி வாகனங்கள் அந்த தொட்டிக்குள் சிக்கி விபத்துக்குள்ளாகின்றன. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அச்சப்படுகிறார்கள். மேலும் நடந்து செல்பவர்களும் தவறி விழுந்து வருகிறார்கள். எனவே அந்த தொட்டிக்கு நிரந்தர மூடி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.