கோத்தகிரி பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுக்கடை பார்களில் கடை செயல்படும் நேரத்திற்கு முன்னதாகவும், கடை விடுமுறை நாட்களிலும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மதுப்பிரியர்களின் அட்டகாசமும் அந்த பகுதியில் அதிகரித்து வருகிறது. எனவே விதிமுறைகளை மீறி மது பாட்டில்கள் விற்பனை செய்வதை போலீசார் தடுக்க வேண்டும்.