கல்வராயன்மலை அடிவாரத்தில் பொதுமக்களின் சுற்றுலாத்தலமான கோமுகி அணை அமைந்துள்ளது. இங்கு உள்ள புத்தர் சிலை மிகவும் சிதலமடைந்து பாழடைந்து காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். எனவே புத்தர் சிலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.