போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள்

Update: 2023-04-23 13:53 GMT

மயிலாடுதுறை பகுதி மகாதான தெருவில் அதிகளவில் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இவை போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடுவே படுத்துக்கொள்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இவற்றால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. மேலும், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்