புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் மெயின் ரோட்டில் அரசு கட்டிடம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்த அரசு கட்டிடத்தை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.