கோத்தகிரி ரைபிள் ரெஞ்ச் பகுதியில் ஆங்காங்கே புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகிறது. இங்கு கடந்த சில வாரங்களாக கரடி நடமாட்டமும் உள்ளது. இதனால் பொதுமக்கள் மாலை மற்றும் இரவில் சாலையில் நடந்து செல்ல அச்சமடைந்து வருகின்றனர். எனவே புதர் செடிகளை வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.