புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் தாலுகா, கோபாலபட்டினம் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பொது சுகாதார வசதி, குப்பை தொட்டி வசதி, கழிவுநீர் வாய்க்கால் வசதி, தார் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.